×

விநாயகர் சிலை கரைத்தபோது ஏரியில் மூழ்கி 6 சிறுவர், சிறுமியர் பலி

சித்தூர்: சித்தூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற கோலாரை சேர்ந்த 6 சிறுவர், சிறுமியர் ஏரியில் மூழ்கி இறந்தனர்.  கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கேசம்பல்லி பஞ்சாயத்து, மரப்பக்கட்டா கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி தங்களது பகுதியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். அவற்றை, சித்தூர் மாவட்டம் வி.கோட்டா மண்டலம், கர்நாடகா- ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள ஏரியில் கரைக்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஏரியில் இறங்கி சிலையை கரைத்தபோது 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அவற்றை காப்பாற்ற மேலும் 3 பேர் ஆற்றில் குதித்தனர்.

 சிறுவர்களின் கூச்சல் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், 6 பேரையும் மீட்க முயன்றனர். அதற்குள் தேஜஸ்ரீ, ரஞ்சிதா, ரோகித் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி இறந்து விட்டனர். அவர்களை சடலமாக மீட்டனர். தனுஷ், வீணா, வைஷ்ணவி ஆகிய 3 பேரை மீட்டு மருத்துவமனைக்க கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் இறந்தனர். இவர்கள் 6 பேரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள், 4 குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.


Tags : Ganesha ,statue ,lake , Ganesha statue, lake, 6 children, small child kills
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி