×

முறைகேடாக பணப்பரிவர்த்தனை புகார் டி.கே.சிவகுமார் மகளுக்கு சம்மன்: நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அனுப்பியது

பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் மகள்  ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்த நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன்  அனுப்பியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக  வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 7ம்  தேதி முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகம்,  தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில்  ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே சமயத்தில் டெல்லியில் உள்ள அவரது  வீட்டில் சோதனை நடத்தியபோது, கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த  8.59 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஹவாலா பணம் என்று ஐடி  அதிகாரிகள் தீர்மானித்தனர்.

இது தொடர்பான விசாரணைக்கு கடந்த 30ம் தேதி டெல்லியில் உள்ள அமாலக்கத்துறை அலுவலகத்தில்  டிகே சிவகுமார் நேரில் ஆஜரானார். நான்கு நாட்கள் சிவகுமாரிடம்  விசாரணை நடத்திய பின், அவரை கைது செய்த அதிகாரிகள் சிபிஐ நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி வரும் 13ம் தேதி வரை விசாரணைக்கு எடுத்துள்ளனர். அவரிடம் கடந்த  பத்து நாட்களாக தினமும் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில்  இப்புகார் தொடர்பாக சிவகுமாரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவரது  மகள் ஐஸ்வர்யாவின் பெயரில் பணம் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டு  இருப்பதாக தெரிகிறது.

இதனால் ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள  அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐஸ்வர்யாவுக்கு நேற்று சம்மன் அனுப்பினர். அதில்  பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் செப்டம்பர் 12ம் தேதி டெல்லியில்  உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.


Tags : DKC Sivakumar ,court , Cash Transfer, TK sivakumar, Enforcement Department
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...