×

பாதாளத்தில் பொருளாதாரம்: பிரியங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி: “நாட்டின் பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்கிறது” என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. இது, அரசின் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கிறது. இதனை சரிசெய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொருளாதார மந்தநிலையை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் நாள்தோறும் பொருளாதார மந்தநிலை குறித்த தனது கருத்துக்களை கூறி வருகிறார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி நேற்று இந்தியில் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,  ‘நாட்டின் பொருளாதாரம், மந்தநிலையின் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்திற்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி ஆட்டோமொபைல் துறை, டிரக் துறையில் சரிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த சரிவானாது உற்பத்தி, போக்குவரத்தில் எதிர்மறையான அறிகுறியாகும். சந்தையின் நம்பிக்கையும் குறைந்து வருகிறது. மத்திய அரசு எப்போது தனது கண்களை திறக்கும்?’ என்று கூறியுள்ளார்.



Tags : Economy, Priyanka Gandhi
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...