×

ஊட்டி-குன்னூர் சாலையில் லவ்டேல் சந்திப்பில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் அவதி

ஊட்டி: ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் லவ்டேல் சந்திப்பு பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் சாலை முழுக்க ஜல்லி கற்கள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேட்டுப்பாளையம் முதல் கூடலூர் வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கம் மற்றும் பலப்படுத்தும் பணிகளை தேசி்ய நெடுஞ்சாலைத்துறை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மோலாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, எல்லநள்ளி முதல் ஊட்டி நொண்டிமேடு வரை சுமார் 10 கி.மீ., சாலை விரிவாக்கம் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் கடந்த ஒராண்டாக நடந்து வருகிறது.

விரிவாக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், லவ்டேல் சந்திப்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் இன்னும் தார் சாலை அமைக்கப்படவில்லை. ஏற்கனவே புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகள் நிறைவு பெறாத நிலையில், சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை முழுக்க சிதறி கிடக்கிறது. இதனால், இச்சாலையில் சிறிய வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஜல்லி கற்கள் மீது ஓட்டிச் செல்லும் போது, தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நாள் தோறும் இப்பகுதியில் விழுந்துள்ளனர். இதில் பலருக்கு  பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, ஊட்டி-குன்னூர் சாலையில் லவ்டேல் சந்திப்பு பகுதியில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க, அப்பகுதியில் விரைந்து தார் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Tags : Motorists ,Lovedale junction ,road ,Coonoor ,Ooty , Ooty-Coonoor Road, Jalli Stone, Motorists, Awadhi
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை