×

அம்பத்தூரில் இயங்கி வந்த பிரபல முருகன் இட்லி கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து: உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு

சென்னை அம்பத்தூரில் இயங்கி வந்த பிரபல முருகன் இட்லி கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை ஏதேனும் புகார் இருந்தால் வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் புகார்தாரர் ஒருவர் சென்னை அம்பத்தூரில் இயங்கி வந்த முருகன் இட்லி கடையில் சாப்பாட்டில் ம்[புழு இருந்ததாக புகைப்படம் ஆதாரத்துடன் வாட்ஸ் அப்பில் புகார் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடைப்படையில் கடந்த 7-ம் தேதி புகாரை பெற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த சோதனையில் இட்லி கடைக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ள போதிலும் அது அதற்கான இடத்தில் வைக்கப்படவில்லை. அதில் சரியான சுத்தம் கடைபிடிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அத்துடன் பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற முருகன் இட்லி கடை தவறியுள்ளது. இதுமட்டுமில்லாமல், உணவு தயாரிப்பவர்கள் தகுந்த மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை ஆகியவற்றை முறையாக இது போன்ற காரணங்களால் முருகன் இட்லி கடையின் உரிமத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் நிறுவனம் இன்று முதல் உணவு தயாரித்து விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 பிரிவு 32 மற்றும் ஒழுங்கு முறைகள் 2011, 2.1.8(1) இன் படி நிறுவனத்தின் உரிமம் எண் 12417023000521 தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடுகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. 


Tags : Ambattur , Ambattur, Murugan Idli Shop, License, Cancellation
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...