×

மொஹரம் பண்டிகையையொட்டி ஜம்மு - காஷ்மீரின் பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

ஸ்ரீநகர்: நாளை மொஹரம் பண்டிகை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பல இடங்களில் ஊரடங்குக்கு நிகரான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மொஹரம் ஊர்வலம் நடத்தும் போது, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தடை உத்தரவை மாநில நிர்வாகம் பிறப்பித்துள்ளது. ஸ்ரீநகரில் உலா லால் சவுக் உள்ளிட்ட அனைத்து வர்த்தக மையங்களுக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்குள் வரும் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு ஏராளமான போலீசார், பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் 5-ம் தேதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எந்த விதமான வன்முறையும் நடக்காமல் தடுக்கும் பொருட்டு பாதுகாப்புப் படையினர் ஏராளமான கெடுபிடிகளை விதித்துள்ளனர். மேலும், இணையதள வசதிகள் துண்டிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதேபோல, பிற மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் ஜம்மு - காஷ்மீரில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் தடை உத்தரவு தளர்த்தப்பட்ட போதிலும், முழுமையாக நிலைமை சீரடையவில்லை. இதன் காரணமாக ஜம்மு- காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை 37-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இன்று முஸ்லிம்கள் ஊர்வலம் செல்வார்கள். அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம், வன்முறை நிகழலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் காவல்துறை ஊடரடங்கு உத்தரவு போன்ற பாதுகாப்புக் கெடுபிடிகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழக்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : parts ,Jammu ,festival ,Kashmir , Jammu and Kashmir, Moharram, curfew
× RELATED அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் என்றால் என்ன?