×

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 8 பயங்கரவாதிகளை கைது செய்தது சோப்பூர் காவல்துறை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத கும்பலுக்கு உதவியதாக நேற்று இரவு 8 பேரை காவல்துறை கைது செய்தது. அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரில் உள்ள சோபூர் பகுதியில் உள்ள மக்களை அச்சுறுத்தி வந்ததாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, 2 வயது குழந்தை உட்பட 4 பேரை தீவிரவாத இந்த கும்பல் தாக்கியுள்ளனர். மேலும் தீவிரவாத இயக்கத்திற்கு உதவி செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், செல்போன்கள், மற்றும் போஸ்டர்களை போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் இருந்து அங்கு பதற்றமான சூழலே நிலவி வருகிறது. மேலும் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நேற்று உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய எல்லை பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளதாகவும், பயங்கர தகுந்த நடத்த உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாதுகாத்து பலப்படுத்தப்பட்டது. மேலும் நேற்று காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி ஒருவரை எல்லை பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 8 பேரை கைது செய்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகளை அப்பகுதி முழுவதும் பரப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். கடந்த சனிக்கிழமை நடந்த சில தாக்குதல்கள் மக்களை அச்சுறுத்தவும், ஜம்மு காஷ்மீரில் உள்ள அமைதியை சீர்குலைக்கவும் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், அஜிஸ் மிர், ஒமர் மிர், தஸீப் நஜர், இமிதியாஸ் நஜர், ஒமர் அக்பர், பைஸன் லதீப், தானிஷ் ஹபீப் மற்றும் சௌகத் அகமது மிர் என 8 பேரையும் காவல்துறை அடையாளம் கண்டுள்ளனர்.

Tags : Sopore ,police arrest ,terrorists ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, Lashkar-e-Taiba, terrorists, arrested
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...