×

வெளிநாடு செல்ல அனுமதி கோரி வதேரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்

டெல்லி: வெளிநாடு செல்ல அனுமதி கோரி ராபர்ட் வதேரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்தது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா, லண்டனில் ரூ.18 கோடியில் சொத்துகளை வாங்கினார். இதில், சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக வதேரா, அவருடைய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. வதேராவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரியும், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரியும் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, அவரது நெருங்கிய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில்  வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் முன்ஜாமீன் வழங்கியது. அப்போது முன் அனுமதி பெற்றே, வெளிநாடு செல்ல வேண்டும் என ராபர்ட் வதேராவுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, டெல்லி நீதிமன்றத்தின் அனுமதிகோரி ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் பெற்ற பிறகு 2வது முறையாக ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்துள்ளார். வெளிநாடு செல்ல அனுமதி கோரி ராபர்ட் வதேரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 12ம் தேதிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முன்னதாக, அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக 6 வார காலம் சென்று திரும்ப ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் அனுமதியளித்தது. லண்டனில் வதேரா சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதால், அங்கு செல்ல மட்டும் அவருக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : New Delhi ,Vadra , Overseas, Vaderra, Trial, Adjourned, Delhi Court
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி