×

ஏடிஎம் மையங்களில் கொள்ளை 10 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் வங்கி ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பல கோடி மோசடி செய்த குற்றவாளிகள் உட்பட 10 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை முழுவதும் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து வந்த கொளத்தூர் திருமலைநகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்த இர்பான் (34), கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த ஷாம்  (எ) சரவணன் (30), அழகு நிலைய பெண்ணை கொலை செய்த மாதவரம் ஜிஎன்டி ரோட்டை சேர்ந்த விகாஷ் (24), கஞ்சா விற்பனை செய்து வந்த எழில்நகரை சேர்ந்த உமாபதி (29), செயின் பறிப்பு மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய ஜாபர்கான்பேட்டை ஆலய மேஸ்திரி தெருவை சேர்ந்த அசோக் (25), வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய தி.நகர் துக்காரம் 2வது தெருவை சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் (24), செல்போன் மற்றும் செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய சென்னை லிங்கி செட்டி தெருவை சேர்ந்த குட்டி (எ) தியாகராஜன் (28), கொலை வழக்கில் தொடர்புடைய சோழவரம் விஜயநல்லூர் பெருமாள் கோயில் தெருவை ேசர்ந்த வினோத் (எ) வெள்ளை (23), பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்த ராகுல் (23), கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய எண்ணூர் தாழங்குப்பம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கார்த்திக் (எ) குள்ள கார்த்திக் (24) ஆகிய 10 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


Tags : robbers ,ATM centers , Gundas , 10 robbers ,ATM centers
× RELATED பட்டாக்கத்தியுடன் திரிந்த 2 ரவுடிகள் கைது