×

சிறப்புச்சட்டமான 371 பிரிவை திருத்தம் செய்ய மாட்டோம்: 371 சிறப்பு சட்டப்பிரிவு என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஒரு அங்கம்... அமித்ஷா பேச்சு

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்புச்சட்டமான 371 பிரிவை திருத்தம் செய்ய மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கவுகாத்தியில் 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்ட வடகிழக்கு கவுன்சிலின் (என்இசி) 68வது கூட்டம் இன்று நடைபெற்றது. வடகிழக்கு கவுன்சிலின் தலைவரான அமித்ஷா கூட்டத்தைத் தொடங்கிவைத்தார். பின்னர் பேசிய அவர்; வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்புச்சட்டமான 371 பிரிவை திருத்தம் செய்ய மாட்டோம்.

371 சிறப்பு சட்டப்பிரிவு என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஒரு அங்கம்; அதை பாஜக அரசு மதிக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு தற்காலிகமானது தான். ஆனால், சட்டப்பிரிவு 371வது பிரிவு வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. இரண்டு சட்டப்பிரிவுக்கும் வேறுபாடு உள்ளது என கூறினார். காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து  செய்யப்பட்டதை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு சட்டத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

சிறப்பு சட்டம் ரத்து செய்யப்படாது என நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தேன். தற்போது, வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 8 முதல்வர்கள் முன்னிலையில், வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 371வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படாது என உறுதி அளிக்கிறேன் இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

Tags : Northeastern State, Special Law 371, Amit Shah
× RELATED தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு...