×

திங்கள்நகரில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம்

திங்கள்சந்தை: திங்கள்நகர் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர்  சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில்  விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன. இதில் குருந்தன்கோடு, தக்கலை  ஒன்றியங்களில் இந்து முன்னணி மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட  சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன. இதையடுத்து தினமும் பூஜைகள், வழிபாடுகள்  நடத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலை அனைத்து சிலைகளும் ஊர்வலமாக  எடுத்து வரப்பட்டன. இதற்கு பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் இன்று  காலை 6 மணியளவில் அனைத்து சிலைகளும் வாகனங்களில் அலங்கார தோரணங்களுடன் மீண்டும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோயில் பகுதியை அடைந்தன. அங்கிருந்து மண்டைக்காடு ெகாண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு மோர் மற்றும் உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன.

Tags : Ganesha , Monday, Ganesha statue, Wijarsana procession
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி