×

டிஆர்டிஓ தயாரிக்கிறது ரூ.1,500 கோடியில் ஆளில்லாத போர் விமானம்

பெங்களூரு: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் ₹1,500  கோடி செலவில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஆளில்லாத போர் விமானம்  தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை மையம் சித்ரதுர்கா மாவட்டம்,  செல்லகெரேவில் அமைக்கப்படுகிறது.மத்திய அரசின் தன்னாட்சி  சுதந்திரத்துடன் இயங்கிவரும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம்  (DRDO) ஆயுததளவாடங்கள் பாதுகாப்பிற்காக ‘‘ ஏர்கிராப்ட் ருஸ்தம்-2 ’’ என்ற  ஆளில்லாமல் இயங்கும் விமானம் தயாரித்து வெற்றி பெற்றதின் மூலம் அனைவரின்  பாராட்டை பெற்றது. அதன் தொடர் முயற்சியாக ஆளில்லாமல் வானில் பறந்து எல்லை  தாண்டி வரும் எதிரிநாடுகளின் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஆற்றல் கொண்ட  போர் விமானம் தயாரிக்கும் மகத்தான முயற்சியை கையில் எடுத்துள்ளது.  இவ்விமானம் தயாரிக்க ₹1,500  கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான பரிசோதனை மையம்  சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள செல்லிகெரேவில் அமைக்கப்படுகிறது.  டிஆர்டிஓவுக்கு சொந்தமான 4,290 ஏக்கர் நிலம் செல்லகெரேவில் உள்ளது. அதில்  விமான பரிசோதனை மையம், ஓடுதளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.  வரும் 2020ம் ஆண்டு தயாரிப்பு பணி  தொடங்கி 2023ம் ஆண்டு முடிக்கும் வகையில் டிஆர்டிஓவின் லட்சியமாகவுள்ளது.

புதியதாக  விமானம் தயாரிக்கும் பணியில்  சுமார் 200 விஞ்ஞானிகள் ஈடுபடுகிறார்கள். இந்த விமானத்தில் 24 மணி நேரமும் சுழன்ற வண்ணமிருந்து ஒவ்வொரு  நொடியும் எல்லையில் நடக்கும் நிகழ்வுகளை கட்டுப்பாட்டு அறையில் உள்ள  மானிட்டரில் பதிவு செய்யும் தொழில்நுட்ப வசதி கொண்டதாக இருக்கும்.டிஆர்டிஓ  கையில் எடுத்துள்ள மகத்தான முயற்சி மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான  இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்  லிமிடெட் (BEL) நிறுவனங்கள் முழு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்குகிறது.  விமானத்தில் எலக்ட்ரோ ஆப்டிகல்  கேமரா பொருத்தப்படுகிறது, 5 கி.மீட்டர் உயரம் மற்றும் 40 கி.மீட்டர்  தூரத்தில் எந்த பொருள் தென்பட்டாலும் துல்லியாக படம் பிடிக்கும் ஆற்றல்  கொண்டதாக கேமராக்கள் உள்ளது.இந்த கேமராக்கள் மூலம் எதிரி நாடுகள்  நமது நாட்டின் எல்லை பகுதிக்கு அனுப்பி வைக்கும் ஆளில்லாத விமானம்,  ட்ரோன்கள் நாட்டின் எல்லைக்கு நுழையும் தகவலை கட்டுப்பாட்டு அறைக்கு  கொடுப்பதுடன் அதை சுட்டு வீழ்த்த வேண்டும் என்ற தகவலை ஏவுகணைக்கும்  தெரிவிக்கும். தகவல் கிடைக்கும் நொடியில் ஏவுகணை, தன்னுள் வைத்துள்ள  வெடிகுண்டுகளை மின்னல் வேகத்தில் வெளியேற்றி எதிரி நாட்டின் விமானங்களை  வீழ்த்தும் வகையில் தொழில்நுட்ப வசதி செய்யப்படுகிறது. விமானத்தில் ரேடார்  பொருத்தப்படுவதால் ஒவ்வொரு நொடியும் மிஷன் கமாண்டருக்கு தகவல் அனுப்பும்.  மேலும் ஏவுகணையில் வெடிகுண்டுகம் உள்ளிட்ட ஆயுதங்கள் வைக்கும் இடமுள்ளது.  டிஆர்டிஓ தயாரிக்கும் ஆளில்லாத போர் விமானம் 12 டன் எடை கொண்டதுடன்  மணிக்கு 400 கி.மீட்டர் பாய்ந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்று  விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Tags : TRTO , TRTO manufactures, unmanned combat, aircraft ,Rs 1,500 crore
× RELATED டிஆர்டிஓ ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் அப்ரன்டிஸ்