×

பிரபல மருத்துவமனைக்கு சொந்தமான 4.25 லட்சம் மருந்துகளை திருடி விற்ற ஊழியர் கைது

சென்னை: ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மருந்தகத்தில் 4.25 லட்சம் மருந்துகளை திருடி விற்பனை செய்த ஊழியரை போலீசார் கைது செய்னர். சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் மருந்தக கண்காணிப்பாளர் கிருஷ்ணன் (31) என்பவர், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த முஹமது இஷாக் (31) என்பவர், எங்கள் நிறுவனத்தின் எழும்பூர் கிளை மருந்தகத்திற்கு பொறுப்பாளராக கடந்த 2014ம் அண்டு முதல் பணியாற்றி வந்தார்.

இவரது பணி காலத்தில், மருந்து வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு மருந்து கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை ரசீது மூலம் வரவு வைக்காமல் எடுத்துக் கொண்டுள்ளார். அதேபோல், வேப்பேரி மற்றும் புரசைவாக்கம் கிளை மருந்தகத்திற்கு மருந்துகள் அனுப்பியதாக கணினியில் கணக்குகாட்டி அந்த மருந்துகளை மற்றொரு தனியார் மருந்தகத்திற்கு விற்பனை ெசய்து பணத்தை மோசடி செய்துள்ளார். அந்த வகையில் 4,26,500 பணத்தை அவர் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட முஹமது இஷாக் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அதன்படி எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4.26 லட்சம் மோசடி செய்த ஊழியர் முஹமது இஷாக்கை கைது செய்தனர்.



Tags : Popular hospital, drug theft, employee, arrest
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...