×

தீவிரவாதம் பற்றி பாகிஸ்தானுடன் நாகரீகமாக பேச இந்தியா தயார்: ஜெய்சங்கர் பேச்சு

சிங்கப்பூர்: ‘‘தீவிரவாதம் பற்றி பாகிஸ்தானுடன் நாகரீகமாக பேச இந்தியா தயாராக இருக்கிறது,’’ என சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். மின்ட் ஆசிய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சிங்கப்பூர் சென்றுள்ளார். இதில் கலந்து கொள்ள சர்வதேச நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் வந்துள்ளனர். இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் விவகாரம் குறித்து ஜெய்சங்கர் பேசியதாவது:இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகள் பேசி தீர்க்க வேண்டும் என்றால், அது அச்சுறுத்தல் இல்லாமல் நடக்க வேண்டும். எல்லையில் தீவிரவாதத்தை தூண்டிவிட்டு பேச்சுவார்த்தை நடத்த முடியாது.

இது என் நெற்றில் துப்பாக்கியை வைத்து மிரட்டாமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.  பாகிஸ்தானில் 40 தீவிரவாத அமைப்புகள் உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இந்த தீவிரவாதம் குறித்து நாகரீகமான முறையில் பேச நாங்கள் தயார். ‘உங்களுடன் பேசுவேன், ஆனால், இரவில் வந்து உங்கள் நகரங்களை குண்டு வைத்து தகர்க்கும் உரிமை எனக்கு உள்ளது’ என்று சொல்ல வேண்டாம்.  இவ்வாறு அவர் பேசினார்.


Tags : India ,Pakistan ,Jaishankar , Terrorism, Pakistan, India, Jaishanger
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!