×

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சொற்குவை இணையதளம்

சென்னை : தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சொற்குவை இணையதளம் தமிழ் ஆய்வாளர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. உலகின் எந்த  இருந்தாலும் அந்த மொழி உயிர்ப்புடன் இருக்க புதிய புதிய சொற்கள் பிறக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது வழக்கத்தில் உள்ள 7,000-க்கும் அதிகமான மொழிகளில் சுமார் 2,500 மொழிகள் அழிவின் விழும்பில் உள்ளன. பரினாம வளர்ச்சிக்கு ஏற்ப அந்த மொழிகளில் புதிய சொற்கள் உருவாகததே  அவற்றின் அழிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனைத்து பிறமொழி வார்த்தைகளுக்கும் தமிழில் புதிய சொற்களை உருவாக்கும் நோக்கத்தோடு சொற்குவை திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதில் உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் ஆங்கிலத்தை விட மூன்று மடங்கு அதிகமாக தமிழில் 4 லட்சத்து 7 ஆயிரம் வார்த்தைகள்  சொற்குவை திட்டம் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இனி எந்த ஒரு புதிய வேறுமொழி வார்த்தை கண்டறியப்பட்டாழும் ஒரே மாதத்தில் அதற்கான தமிழ் வார்த்தை சொற்குவையில் உருவாக்கப்பட்டுவிடும் என்று  தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறுகிறார். சொற்குவை என்ற இணையதளம் முகவரியில் பயன்பாட்டில் உள்ள பல வடமொழி சொற்களின் பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். அதே நேரம் அந்த இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் புதிய தமிழ் சொற்களை நாமும் உருவாக்கலாம். ஒரு மனிதனின் மொழி என்ற நிலையில் தமிழ்மொழியை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள சொற்குவை திட்டம், தமிழ் ஆர்வலர்கள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.


Tags : Tamil Language, Growth, Help, Glossary, Website
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...