×

நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: நுகர்வோரின் குறைகள், புகார்களை நிவர்த்தி செய்யும் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது. நுகர்பொருட்களின் குறைபாடு, நுகர்பொருள் தேவையில்  பற்றாக்குறை ஆகியவற்றில் உள்ள நுகர்வோரின் குறைபாடுகளை சரி செய்து, நுகர்வோர்  பாதுகாப்பினை வலுப்படுத்தும் இம்மசோதா முன்னதாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அது நேற்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. விவாதத்தின் போது இது தொடர்பாக பேசிய மத்திய நுகர்பொருள் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், ``உறுப்பினர்கள் கூறிய கருத்துகள் மசோதா திருத்தத்தின் போது எடுத்து கொள்ளப்படும்,’’ என்று தெரிவித்தார்.




Tags : Consumer ,Protection,
× RELATED நெருங்கும் தீபாவளி பண்டிகை: பட்டாசு உற்பத்தி பணிகள் சிவகாசியில் தீவிரம்