×

விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரர் கோயிலில் மூலவரை தரிசனம் செய்த சூரியபகவான்

பொன்னை: பொன்னை அருகே விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி கற்றைகள் விழுந்து ஈஸ்வரனை சூரியபகவான் தரிசனம் செய்தார். வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனமர் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவரை பொன்னீஸ்வரர் என்றும் கூறுவார்கள். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 23ம் நாள் தொடங்கி சித்திரை மாதம் 1ம் தேதி வரை 9 நாட்கள் கருவறையில் உள்ள மூலவர் மீது மூன்று வாயிற்படியில் எழுந்தருளியிருக்கும் பொன்னீஸ்வரர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறுகின்றது. இந்நிகழ்வு இன்றும் நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த அபூர்வ நிகழ்வை பல்வேறு கிராம மக்கள் தரிசனம் செய்தனர்….

The post விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரர் கோயிலில் மூலவரை தரிசனம் செய்த சூரியபகவான் appeared first on Dinakaran.

Tags : Lord ,Surya ,Moolava ,Vinnampally Agatheeswarar temple ,Ponnai ,
× RELATED இறைவன் காட்டும் ரெட் அலர்ட்!