×

கோவில்பட்டி அருகே கோயிலின் செம்பு கலசம் குளத்தில் வீச்சு: கொள்ளையடிக்கப்பட்டதா? போலீஸ் விசாரணை

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே  கோயிலின் செம்பு கலசம் குளத்தில் கல்லைக் கட்டி மர்ம நபர்களால் வீசப்பட்டுள்ளது. கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரில் சாலைக்குளம் ஒன்று உள்ளது. இதில் செம்பிலானான கோயில் கலசம், கல்லைக் கட்டி வீசப்பட்டுள்ளது. இருப்பினும் கலசம் தண்ணீருக்குள் மூழ்காமல், கரையோரமாக ஒதுங்கியது. இன்று காலை அந்தப் பகுதி வழியாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள், இதைப் பார்த்து போலீசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.ஊருக்கு ஒதுக்கு புறமான கோயிலில் விமானத்தின் செம்பு கலசத்தை திருடிய கொள்ளையர்கள் கல்லைக் கட்டி சாலைக்குளத்தில் வீசியுள்ளதால், கொஞ்ச நாட்கள் கழித்து குளத்தில் மூழ்கி கலசத்தை எடுத்துச் செல்ல நினைத்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கலசம் எந்தக் கோயிலுக்கு சொந்தமானது? கோவில்பட்டி சுற்று வட்டாரங்களில் எந்தக் கோயிலிலாவது விமான கலசம் திருடு போனதாக புகார் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவில்பட்டி அருகே சாலைகுளத்தில் செம்பு கலசம் மிதப்பது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post கோவில்பட்டி அருகே கோயிலின் செம்பு கலசம் குளத்தில் வீச்சு: கொள்ளையடிக்கப்பட்டதா? போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Govilbatti ,KOVILBATTI ,Nalatinbuthur ,Kasam Pond Ranges ,Dinakaran ,
× RELATED சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு