×

கேஎஸ்ஆர்டிசியை தனியார் மயமாக்க முயற்சி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் புகார்

மைசூரு: போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனையை முன்வைத்து கே.எஸ்.ஆர்.டி.சி கழகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியில் பாஜ அரசு ஈடுபட  முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எம்.லக்‌ஷ்மணன் தெரிவித்தார்.மைசூருவில் நேற்று ெசய்தியாளர்களிடம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எம்.லக்‌ஷமணன் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றி தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்க முன்வரவேண்டும். கோடிஹள்ளி சந்திரசேகர் மோடிக்கு எதிரானவர் என்பதால்  அவரை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கவில்லை. ஏராளமான தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஊழியர்களை வைத்து தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. அரசு  போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களின் ேகாரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post கேஎஸ்ஆர்டிசியை தனியார் மயமாக்க முயற்சி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் புகார் appeared first on Dinakaran.

Tags : KSRTC ,Congress ,Mysuru ,BJP government ,KSRTC Corporation ,Dinakaran ,
× RELATED கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது