×

பில்லி சூனியம் வைப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையா? உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: பாஜ.வை  சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், ‘வெகுமதி, மிரட்டல், அச்சுறுத்தல், வேலைவாய்ப்பு தருதல் போன்ற பல்வேறு வழிகளில் மதமாற்றம் செய்வது  குற்றமாகும். மேலும்,  மாந்திரீகம், சூனியம் மற்றும் வஞ்சகமாக மதமாற்றம் செய்வதை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டது. இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10  ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்,’ என கூறியிருந்தார். இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் நாரிமன், கவாய்,  ஹிரிஷிகேஷ் ராய் அமர்வு, ‘என்ன ரிட் மனு இது? இதை தாக்கல் செய்தஉங்கள் மீது  அதிகஅபராதம் விதிக்க முடியும். 18 வயது நிரம்பியவர்கள் விருப்பமான மதத்தை தேர்வு செய்ய அனுமதிக்கக் கூடாது என்பதற்கு மனுவில் எந்த காரணமும் இல்லை,’ என கண்டித்து, அதை தள்ளுபடி செய்தனர்….

The post பில்லி சூனியம் வைப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையா? உச்ச நீதிமன்றம் கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Billy ,Supreme Court ,New Delhi ,Baja ,Aswini Ubadyaya ,WI ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு