×

பணி நிரந்தரம் செய்யக்கோரி வண்டலூர் பூங்காவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் 100 நிரந்தர ஊழியர்களும், 185 தற்காலிக பணியாளர்களும் உள்ளனர். இதில், பணி நிரந்தரம் இன்றி 50 ஊழியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பணி நிரந்தரம், பதவி உயர்வு அல்லது அதற்கு இணையான சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி நேற்று முன்தினம் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் இரணியப்பன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேரணியாக சென்று, வண்டலூர் பூங்கா இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அங்கிருந்த பூங்கா அதிகாரிகளிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். அதில், ‘‘மனித கழிவுகளை மனிதர்களே அள்ள தடை இருக்கும் நிலையில், ஆபத்தான வன விலங்குகளை பராமரிப்பதுடன் அவற்றின் கழிவுகளை அகற்றி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு பூங்காவாக பராமரித்து வரும் எங்களின் கோரிக்கையை அரசும், வனத்துறையும் ஏற்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Vandalur Park, Staff, Demonstration
× RELATED நாடாளுமன்ற ஊழியர்கள் மேலும் 300 பேருக்கு கொரோனா