×

கிராமத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு

சிக்கமகளூரு: கிராம பகுதியில் மதுக்கடை அமைக்க அனுமதி வழங்ககூடாது என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கிராமத்தினர் போராட்டம் நடத்தி கலெக்டர் ரமேஷிடம் மனு கொடுத்தனர். சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா உத்தேபோரனஹள்ளி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுக்கு முன் மதுக்கடை இயங்கி வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் கடந்த 5 ஆண்டுக்கு முன் அகற்றப்பட்டது. அப்படி அகற்–்றப்பட்ட மது கடையை மறுபடியும் அதே இடத்தில் திறக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினர் கடை அமைக்க அனுமதி வழங்ககூடாது என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் ரமேஷை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.இப்போராட்டத்தில் கலந்து கொண்ட கிராமத்தினர் கூறியதாவது: கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அகற்–்றப்பட்ட மது கடையை தற்போது மறுபடியும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மது கடை மறுபடியும் திறந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதே போல் பஸ் நிலையம் அருகே மது கடை திறக்க நடவடிக்கை எடுப்பதால் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு அகற்றப்பட்ட மது கடையை மறுபடியும் திறக்க அனுமதி வழங்ககூடாது என்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது என்றனர். …

The post கிராமத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Chikkamagaluru ,Dinakaran ,
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு...