நெல்லை: விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால், சாலையோரத்தில் தக்காளியை விவசாயிகள் கொட்டிச் சென்றனர். நெல்லை மாவட்டத்தில் மானூர், உக்கிரன்கோட்டை, மேலச்செவல், சேரன்மகாதேவி பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குளங்கள், கிணறுகளிலும் தண்ணீர் அதிகளவு காணப்படுகிறது. இதனால் தக்காளி மட்டுமின்றி இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலை, அவரை உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சலும் அமோகமாக உள்ளது. தற்போது மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்து உள்ள நிலையில், விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையே விற்கப்படுகிறது. தோட்டங்களில் பறிக்கப்படும் தக்காளியை வேலையாட்களை கொண்டு பறித்து தரம் பிரித்து மூட்டைகளில் கட்டி பாவூர்சத்திரம், நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த மார்க்கெட்களில் கொண்டு சேர்ப்பது வரை செலவுகள் கூடுதலாகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் செடிகளிலேயே தக்காளி பழுத்து விடுகின்றன. இதனால் தினமும் பறித்து மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் விலையில்லாததால் கடும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் உள்ளூரில் விற்பனை செய்தது போக மீதி தக்காளி பழங்களை சாலையோரத்தில் வீசிச் செல்லும் அவலம் காணப்படுகிறது….
The post விளைச்சல் இருந்தும் தக்காளிக்கு விலையில்லை: சாலையோரத்தில் கொட்டிச் சென்ற விவசாயிகள் appeared first on Dinakaran.
