×

தூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சத்தால் படிப்படியாக ஊரை காலி செய்த பொதுமக்கள்: முதியவர் மட்டும் தஞ்சம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சத்தால் ஒரு கிராமமே ஊரை காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளது. மேலும் ஒரேயொரு முதியவர் மட்டும் வசிக்கும் நிலையில் தற்போது அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு குடும்பமாக வெளியேறி செக்கரக்குடி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கேரளாவிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதை தொடர்ந்து படிப்படியாக பெரும்பான்மையினர் ஊரை காலி செய்த நிலையில் கந்தசாமி என்ற முதியவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். மேலும் 80 வயதான இவர் தனது மனைவி இறந்த நிலையில் அவரின் நினைவில் அங்கேயே தங்கி விட்டார்.

இதையடுத்து தற்போது அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ள நிலையில் வெளியூர்களில் தஞ்சம் அடைந்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் கந்தசாமி வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார். இதையடுத்து தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் சூழலில் ஒரே ஒரு முதியவர் மட்டும் உள்ள மீனாட்சிபுரத்தில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் அதை பிடிப்பதற்கும், அருந்துவதற்கும் ஆள் இல்லை என்பது தான் முதியவர் கந்தசாமியின் வேதனையாக உள்ளது. இதை தொடர்ந்து வெளியூர்களில் உள்ள அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை கோவில் திருவிழாவுக்காக மீனாட்சிபுரம் கிராமத்தில் ஒன்று கூடுவது வழக்கம். மேலும் தற்போது அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்புவர்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Civilians ,Asylum seekers ,Thoothukudi , Thoothukudi, water famine, evacuation of civilians, elderly and asylum seekers
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...