×

சிறுசேமிப்பு திட்டத்திற்கான வட்டியை குறைக்க மத்திய அரசு திட்டம்: ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

டெல்லி: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கான சிறுசேமிப்பு வட்டி அரை சதவீதம் வரை குறைக்கப்படலாம் என்று டெல்லியில் நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து வங்கிகளுக்கான கடன் வட்டியான ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி அண்மையில் முக்கால் சதவீதம் வரை குறைத்தது. மேலும் ரெப்போ விகிதம் எப்போது 5.75 சதவிகிதமாக உள்ள நிலையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைக்க அரசிடம் வங்கிகள், தபால் நிலையங்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி வட்டி குறைப்பிற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டிற்கு வட்டி குறைப்பு அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும் வங்கி, தபால் நிலைய சேமிப்பு கணக்கிற்கு இப்போது 4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து பிக்சட் டெபாசிட் வட்டி ஓராண்டிற்கு 7 முதல் 3 ஆண்டு வரை 8 சதவீதமாக இருக்கிறது. மேலும் தேசிய சேமிப்பு பத்திரம், பி.எப் கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றிலும் பலர் முதலீடு செய்திருக்கிறார்கள். மேலும் இவை அரை சதவீதம் வரை குறைக்கப்பட்டால் சிறுசேமிப்பு வட்டியை நம்பி இருக்க கூடிய ஓய்வு பெற்றோர் பலரும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.


Tags : government , Delhi, Small Scheme, Interest, Reduction, Central Government Scheme, One Day, Announcement, Release
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...