×

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூறியது தனிப்பட்ட கருத்து: கராத்தே தியாகராஜன்

சென்னை: காங்கிரஸ் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூட்டிய மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தனிப்பட்ட சில கருத்துகளை நான் கூறினேன். அது சில நாளிதழ்களில் வெளிவந்ததால் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சில கருத்துக்களை கூறியிருந்தார். தொடர்ந்து அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் கூறிவிட்டார். இது தொடர்பாக நான் கூறியதும் முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட கருத்தாகும். அது திமுகவுக்கோ அல்லது திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கோ எதிரானது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்றைக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தி விசுவாசமாகவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வழிகாட்டுதலின் படி செயல்படுவேன்.

Tags : election ,Karate Thiagarajan , Local election, personal opinion, Karate Thiagarajan
× RELATED மருந்து கண்டுபிடிக்கும் முன்பே...