சிமி அமைப்பின் தடை நீட்டிப்பு தீர்ப்பாயம் விசாரணை நிறைவு

குன்னூர்: கடந்த 1977ம் ஆண்டு ‘சிமி’ எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு துவங்கப்பட்டது. பல்வேறு தீவிரவாத செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டதால், கடந்த 2001ல் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. 2014 முதல் 5ஆண்டு தடை நீட்டிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் தடை உத்தரவு முடிவுக்கு வந்தது.  இது தொடர்பாக சட்டவிரோத தடுப்பு தீர்ப்பாயம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகிறது.  இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையில் குன்னூரில் உள்ள நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், தீர்ப்பாயத்தின் சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், போலீஸ் அதிகாரிகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர்  விசாரணை நடத்தினர்.

பல்வேறு மாநிலங்களில் முக்கிய  குண்டுவெடிப்பு நடந்தது குறித்து விசாரணை நடந்தது.   இதில் இந்து அமைப்புகள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டது. கர்நாடகாவில் ‘சிமி’ இயக்கத்தினர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறி தடை செய்யும்படி  நீதிபதியிடம் கர்நாடக போலீசார் மனுக்கள் அளித்தனர். ‘சிமி’ அமைப்பு சார்பில்  யாரும் வராத நிலையில், சட்டவிரோத தடுப்பு தீர்ப்பாயம்  விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது.
Tags : hearing ,TIME Tribunal , Extension , SIMI system, Tribunal hearing ,completed
× RELATED மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 10...