மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்த சேரம்பாடி வனசரகத்திற்கு உட்பட்ட கோரஞ்சால் பகுதியில் குடியிருப்புகள் உள்ளது. இங்கு அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து  கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சேரம்பாடி  ரேஞ்சர் சின்னத்தம்பி உள்ளிட்டோர் இறந்த யானையின் உடலை பார்வையிட்டு  ஆய்வு செய்தனர்.  இப்பகுதியில் உள்ள தோட்டத்தில் புகுந்த யானை   மின்கோபுரம் பகுதியில் காய்ந்த மரத்தை உடைத்துள்ளது. அப்போது மரம் உயர் மின்னழுத்த  மின்கம்பியில் விழுந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி யானை இறந்தது தெரியவந்துள்ளது.


Tags : Electricity ,struck, Male elephan,t kills
× RELATED வீட்டில் இருந்து யானை தந்தங்கள்...