சியாம முகர்ஜி நினைவு தினம் பிரதமர் அஞ்சலி

புதுடெல்லி: பாஜ.வின் தாய் கட்சியான ஜனசங்க  நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி டிவிட்டரில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜன சங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி. கடந்த 1953ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் அவர் மரணமடைந்தார். சியாம பிரசாத்தின் 66வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பிரதமர் நரேந்தி ரமோடி அவரை நினைவு கூர்ந்தார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் ஒற்றுமைக்காக தனது வாழ்க்கை அர்ப்பணித்தவர் சியாம பிரசாத் முகர்ஜி. வலிமையான மற்றும் ஒன்றிணைந்த இந்தியா மீதான அவரது ஆர்வம் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. மற்றும் 130 கோடி இந்தியர்களுக்கு சேவையாற்றும் வலிமையையும் எங்களுக்கு தருகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

× RELATED அதிமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு