×

குளிர்பானத்தில் சாக்லெட் கவர் தனியார் நிறுவனத்துக்கு 35 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குளிர்பானத்தில் சாக்லெட் கவர் இருந்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தனியார் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் ₹35 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 2011ம் ஆண்டு ஹாரிஸ் சாலையில் உள்ள பேக்கரியில் ₹9 கொடுத்து கூல்டிரிங்ஸ் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை குடிக்கும்போது, பாட்டிலில் சாக்லெட் கவர் இருந்துள்ளது.  இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக்திவேல் பேக்கரி உரிமையாளரிடம் கேட்டபோது,  அவர் தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், கூல்டிரிங்ஸ் காலாவதி தேதியும் சரியாகதான் இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு  ஆளான சக்திவேல் உரிய இழப்பீடு கோரி பிரபல கூல்டிரிங்ஸ் நிறுவனம் மீது, சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மோனி, உறுப்பினர் பாஸ்கர் குமரவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில் கூல்டிரிங்சில் சாக்லெட் கவர் கிடந்தது உறுதியாகியுள்ளது.  இதனால் வாடிக்கையாளர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். எனவே, பாதிக்கப்பட்ட சக்திவேலுக்கு கூல்டிரிங்ஸ் நிறுவனம் ₹35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.




Tags : Chocolate cover ,soft drink, fine, Consumer court,
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...