×
Saravana Stores

சூரியன் எப்.எம்.,93.9 சார்பில் சுகிசிவம் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம்: பொதுமக்கள் குவிந்தனர்

சேலம், ஜூன் 23: சூரியன் எப்.எம் 93.9 சார்பில், சேலத்தில் நேற்று மாலை நகைச்சுவை பட்டிமன்றம் நடந்தது. இதை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியோடு கண்டுகளித்தனர். தமிழகத்தின் நம்பர்ஒன் எப்.எம்.ஆக கவுரவிக்கப்பட்டுள்ள, சன் குழுமத்தின் அங்கமான சூரியன் பண்பலை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுச்சேரி, சேலம், ஈரோடு, வேலூர் என 10 இடங்களில் செயல்பட்டு வருகிறது. சேலம் சூரியன் எப்.எம் 93.9 சார்பில், நேற்று  மாலை சேலம் 5ரோடு ஸ்ரீரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில், இளைஞர்கள் வெற்றியை நிர்ணயிப்பது குடும்பச் சூழலா? சுற்றுச் சூழலா? என்ற தலைப்பில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.

இதில் மணிகண்டன், மோகனசுந்தரம், கோவை சாந்தாமணி மற்றும் எழிலரசி ஆகியோர் பங்கேற்று, தங்களின் சிந்தனை மிக்க கருத்துக்களை எடுத்துரைத்தனர். இறுதியாக சொல்வேந்தர் சுகிசிவம், இளைஞர்களின் வெற்றிக்கு குடும்பச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் இரண்டும் உறுதுணையாக உள்ளது என்ற தீர்ப்பை வழங்கினார். இப்பட்டிமன்றத்தை, பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கண்டுகளித்தனர்.

Tags : Surya FM, 93.9, Comedy Bar
× RELATED பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து!