×

மீண்டும் கொரோனா விஸ்வரூபம் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய பஞ்சலிங்க அருவி

உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. திருமூர்த்திமலை வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம்.கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு, சமீபத்தில்தான் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதன் காரணமாக, சுற்றுலா இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் குறைத்துள்ளனர். நேற்று திருமூர்த்தி மலைக்கு ஒரு சில பக்தர்களே வந்தனர். அவர்கள் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு சென்றனர். சிலர் பஞ்சலிங்க அருவிக்கு சென்றனர். தற்போது நுழைவு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. இருந்தாலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது….

The post மீண்டும் கொரோனா விஸ்வரூபம் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய பஞ்சலிங்க அருவி appeared first on Dinakaran.

Tags : Corona Viswarupam ,Panchalinga Fallout ,Udumalai ,Tirumurthimalai ,panchalinga Fall ,Thirumurthimalai ,Amanalingeswarar Temple ,Korona Viswarupam ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு