வேலூரில் குடிநீர் கேட்டு அரசு பஸ்கள் சிறைபிடிப்பு

வேலூர்: வேலூர் காகிதப்பட்டறை செல்லியம்மன் கோயில் தெரு, தலையாரி மாரியம்மன் கோயில் தெரு, மேலாண்டை தெரு உள்ளிட்ட தெருக்களில் வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஆனால் மாலை 4 மணி வரை அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாலை 4 மணியளவில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வேலூர்- ஆற்காடு சாலையில் காகிதப்பட்டறை அரசு பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த 2 அரசு பஸ்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதையடுத்து 2வது மண்டல உதவி ஆணையர் கண்ணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பைப் லைன் பழுதடைந்துள்ளதால் 2 நாட்களில் சரி செய்யப்படும். தற்போது 3 டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : Vellore , Vellore, drinking water, government buses, captivity
× RELATED சென்னையில் அரசு பஸ்கள் வருவதை தெரிந்துகொள்ள ‘லேம்ப்-ஆப்’ அறிமுகம்