×

தமிழகம் முழுவதும் 17 கூடுதல் எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் 17 கூடுதல் எஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவு: தூத்துக்குடி மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு கூடுதல் எஸ்பி வேதரத்தினம், தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பி சீனிவாசபெருமாள், லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், ராமநாதபுரம் கடலோர காவல்படை கூடுதல் எஸ்பி இளங்கோ, சிவகங்கை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவுக்கும், புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு கூடுதல் எஸ்பி வனிதா, மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவுக்கும்,

பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு கூடுதல் எஸ்பி கோபி, நீலகிரி மதுவிலக்குப் பிரிவுக்கும், நாமக்கல் மாவட்ட மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு கூடுதல் எஸ்பி சுஜாதா, தர்மபுரி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவுக்கும், நீலகிரி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு கூடுதல் எஸ்பி முகிலன், தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பி பாஸ்கரன், கரூர் மாவட்ட தலைமையிடத்துக்கும், ஈரோடு மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு கூடுதல் எஸ்பி அனிதா, கோவை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவுக்கும், கன்னியாகுமரி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பி முத்துக்கருப்பன், திருச்சி போலீஸ் பயிற்சி பள்ளி கூடுதல் எஸ்பியாகவும்,  கரூர் மதுவிலக்கு கூடுதல் எஸ்பி பாரதி, சென்னை தலைமைச் செயலக செயக்யூரிட்டி பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், அரியலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு கூடுதல் எஸ்பி ரவி, சிபிசிஐடி கூடுதல் எஸ்பியாகவும், அந்தப் பிரிவில் கூடுதல் எஸ்பியாக இருந்த லாவண்யா, லஞ்ச ஒழிப்புத்துறைக்கும்,

திருச்சி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்த ராமமூர்த்தி, எஸ்பி சிஐடி கூடுதல் எஸ்பியாகவும், கடலூர் தலைமையிட கூடுதல் எஸ்பி குமார், சென்னை(தெற்கு) மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவுக்கும், டிஜிபி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் எஸ்பி டி.குமார், தூத்துக்குடி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவுக்கும் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : SPs ,Tamil Nadu Action Change ,DK Rajendran , Tamils, SPs, DGP DK Rajendran
× RELATED போன் ஒட்டுக் கேட்ட வழக்கு தெலங்கானாவில் மாஜி போலீஸ் அதிகாரி கைது