தினகரன் செய்தி எதிரொலி தீப்பந்தம் வைத்து குடிநீர் பிடித்த மீனங்குடிக்கு குடிநீர்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனங்குடி ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஊரணியில் கிணறு அருகே இரவு, பகலாக காத்திருந்து கிராமமக்கள் தண்ணீர் பிடித்து சென்றனர். வெளிச்சத்துக்காக இரவு நேரங்களில் தீப்பந்தங்கள் ஏந்தி, தண்ணீர் பிடித்து செல்லும் இவர்களின் பரிதாப நிலை குறித்து, நேற்று வெளியான தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து மீனங்குடி கிராமத்துக்கு நேற்று முதல் காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டது. இதனால் கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>