×

சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இன்றும் நாளையும் சில மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: எழும்பூரில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இரவில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 10.45, 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 10.25, 11.05, 11.30, 11.59 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 10.15 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tambaram , Electric trains, cancellations, Chennai Beach, Tambaram
× RELATED டெல்லி - சென்னை, சென்னை - டெல்லி சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கம்