×

72 லட்சம் மின்கட்டணம் பாக்கி குன்னூர் நகராட்சி கட்டிடத்தில் மின் இணைப்பு துண்டிப்பு

குன்னூர்: நீ நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கடைகள் செயல்படுகின்றன. குன்னூர் நகராட்சியில் போதிய  வருமானம்  இல்லாததால்  நகர் புறங்களில் வளர்ச்சி பணிகள் செய்ய முடியாத நிலை நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாடு  தலைவிரித்தாடும் நிலையில் அதனை சரிசெய்ய முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். பேருந்து நிலையத்தில் இருக்கை வசதிகள் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் உள்ளனர்.

 இதனிடையே குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு முறையாக  குறித்த நேரத்தில் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் ₹72 லட்சம் வரை மின் கட்டண பாக்கி உள்ளது. இதனையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மின்வாரிய அதிகாரிகள் நேற்று நகராட்சிக்கு சொந்தமான அனைத்து கட்டிடங்களிலும் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அதிர்ந்து போன நகராட்சி அதிகாரிகள் மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மின் சேவை தற்காலிகமாக வழங்கப்பட்டது.


Tags : Paki Gunnur Municipal Building , Power Station, Coonoor Municipality, Disconnection
× RELATED என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை...