×

பெருந்துறை அருகே உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்: போலீசார் குவிப்பு

பெருந்துறை: பெருந்துறை அருகே சித்தன்குட்டையில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   கோவை ராசிபாளையம் முதல் தருமபுரி பாலவாடி வரை செல்லும் 400 கிலோவாட் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சேலம் மற்றும் கோவை மண்டல  பொது கட்டுமான வட்டத்தில் மொத்தம் 562 மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. சேலம் மண்டலத்தில் 280 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் ஈரோடு மாவட்டத்தில் இன்னும் 40 கோபுரங்கள் மட்டுமே அமைக்கும் வேண்டி உள்ளது.  இந்நிலையில், நேற்று காலை பெருந்துறை அருகே சித்தன்குட்டையில் கீதாபூபதி என்பவரின் நிலத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் அருளரசு, உதவி செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மின்  பணியாளர்கள் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த தோட்ட உரிமையாளர் கீதாபூபதி மற்றும் விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இருப்பினும், பணி நடக்கும் இடத்தில் 50க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், `நில உரிமையாளர் கீதா பூபதிக்கு சொந்தமான 128 ச.மீ பரப்பளவு உள்ள இடத்திற்கு 1 லட்சத்து 39 ஆயிரம் காசோலையாக ஒப்படைத்தோம். இதை வாங்க மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவுபடி மின்கோபுரம் அமைக்கும் பணியை துவங்கி உள்ளோம்’’ என்றனர்.

Tags : fighting ,tower officials ,Perundurai , Perumanpuram, the tower of high-rise, the police
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...