×

கர்நாடக சட்டசபைக்கு இடைத்தேர்தல் வராது...தேவகவுடாவின் கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளன: முதல்வர் குமாரசாமி

பெங்களூரு : கர்நாடகா சட்டசபைக்கு இடைத்தேர்தல் வரும் என்ற தேவகவுடாவின் கருத்துக்கு முதல்வர் குமாரசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் தங்களது ஆட்சி 4 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்று தெரிவித்த முதல்வர் குமாரசாமி, மாநகராட்சித் தேர்தல் குறித்து தேவகவுடா கூறியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளன என்றார். முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவைக்கு திடீர் தேர்தல் நடைபெறும் என்று தேவகவுடா தெரிவித்திருந்தார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியில் உள்ளது. தற்போதைய முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் மக்களவை தேர்தலில் தோல்வியையடுத்து மதசார்பற்ற ஜனதள மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா செய்தியாளர்களை சந்தித்த போது, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறினார். மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஆட்சியை சுமூகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறினார். மேலும் கர்நாடகாவில் விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் கர்நாடகவில் கூட்டணி ஆட்சி நீடிக்குமா என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் கருத்துக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தேவகவுடா கூறியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Karnataka Assembly, By-Election, Devakauda, Opinion, Kumaraswamy Deny
× RELATED டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள்...