×

இமாசலப் பிரதேசத்தில் 500 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

குலு: குல்லு மாவட்டத்திற்கு உட்பட்ட பன்சர் நகரில் இருந்து கதுகுஷானி என்ற இடத்திற்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. ,மேலும் 42 இருக்கைகள் கொண்ட அந்த பேருந்தில் சுமார் 70 பேர் ஏற்றப்பட்டிருந்ததாகவும் அவர்களில் பலர் பேருந்தின் கூரை மேல் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த பேருந்து மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது ஒரு வளைவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 500 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதை தொடர்ந்து பேருந்தின் கூரை மேல் பயணம் செய்தவர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த மக்களும், மீட்பு குழுவினரும் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

மேலும் பேருந்துகளின் சிதைவுகளுக்கு இடுக்குகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அவர்கள் மனித சங்கிலி அமைத்து அங்கிருந்த ஓடையை கடக்க முயன்றனர். இதையடுத்து படுகாயம் அடைந்தவர்கள் பன்சார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலை கடமாக உள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முதல் கட்டமாக உயிர் இழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : bus accident ,Himachal Pradesh , Himachal Pradesh, 500 feet groove, bus, accident, death toll rises to 44
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...