விமானப்படை விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி

டெல்லி : விமானப்படையின் ஏ.என் 32 விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அஸ்ஸாமில் இருந்து கடந்த ஜூன் 3ம் தேதி புறப்பட்டு அருணாசலத்தில் சீன எல்லை அருகே மலைகளின் நடுவே விழுந்து நொறுங்கிய ஏ.என். 32 விமானத்தில் இருந்த 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.இதில் 6 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதர 7 பேரின் உடல்கள் உருக்குலைந்து சிதறிப்போயிருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.× RELATED சாலை விபத்தில் பெண் பலி உடலை சாலையில் கிடத்தி மறியல்