இதயம் தொடர்பான நோய்களை யோகா செய்வதன் மூலம் தடுக்க முடியும் - பிரதமர் நரேந்திர மோடி

ராஞ்சி: யோகாவின் பயன்களை அனைவரும் ஒன்றினைந்து பரப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைப்பதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக யோகா எப்போதும் இடம் பெற்றுவருவதாக தெரிவித்த அவர், உலகம் முழுதுவம் அதிகரித்து வரும் இதயம் தொடர்பான நோய்களை யோகா செய்வதன் மூலம் தடுக்க முடியும் என்று தெரிவித்தார். உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா என்றும், அதனை உலகமே கொண்டாடுவாதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தினந்தோறும் நாம் அனைவரும் யோகாசனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.


Tags : Narendra Modi , International Yoga Day, Prime Minister Modi, Yoga Program,
× RELATED நினைவான விவசாயிகளின் கனவு..காவிரி...