×

வெப்ப சலனத்தால் சென்னையில் திடீர் மழை

சென்னை: தமிழகத்தில் நிலவும் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள சென்னை, சுற்றுவட்டாரப்பகுதிகளில் திடீரென நேற்று மாலை மழை பெய்தது. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது.கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு திருத்தணியில் 117 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொட்டது. இதனால் பொதுமக்கள் வெளியில் வரவே  அச்சப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 108 டிகிரி வெயில் நிலவியது. சென்னை, கடலூர், மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் 106 டிகிரி, புதுச்சேரி, திருச்சி, காரைக்கால் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. தற்போது  வங்கக் கடல் பகுதியில் வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. அந்த காற்று சுழற்சி மேலும் நீடிப்பதால்  இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யும். இந்நிலையில் நேற்று மாலை திருவான்மியூர், தரமணி, அண்ணாசாலை உள்பட சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Tags : Chennai , Thermal, Sudden, rain,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...