×

திருமணம் செய்து கொள்ள மிரட்டல் ஆபாச படங்களை வைத்து மிரட்டுகிறார்: சின்னத்திரை நடிகை நிலானி போலீசில் பரபரப்பு புகார்

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி ச்சூட்டை கண்டித்து போலீஸ் உடை அணிந்து கடுமையாக விமர்சனம் செய்து தனது பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்டார். அதைதொடர்ந்து காவலர் சீருடையை சொச்சைப்படுத்தியதாக நடிகை நிலானி மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

நடிகை நிலானியை காதலித்த உதவி இயக்குநர் லலித்குமார் காந்தி தற்கொலை செய்து கொண்டார்.  இந்நிலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை நிலானி நேற்று பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு சில நிகழ்வுகளால் சிலர் என்னை தொடர்பு கொண்டு எனக்கு உதவுவதாக கூறினர்.

அதில் ஒருவர் மஞ்சுநாதன். இவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், நான் இந்தியா வரும் போது உதவுவதாக என்னிடம் நண்பர் போல் பழகினார். பின்னர் நேரில் என்னை பார்த்த சில மாதங்களுக்கு பின் திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும், எனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் கூறினார். நானும் எனது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சம்மதித்தேன். பிறகு எனக்கு மஞ்சுநாதன் செல்போன் ஒன்று வாங்கி கொடுத்தார்.

அதை தொடர்ந்து ரகசியமாக திருமணம் செய்ய வற்புறுத்தினார். அதற்கு நான் மறுக்கவே எனக்கு வாங்கி கொடுத்த செல்போனை எடுத்து கொண்டு சென்று விட்டார். சமாதானம் பேச அவரது தாய் என்னிடம் பேசவைத்தார். அதன் பிறகுதான் மஞ்சுநாதனுக்கு திருமணம் நடந்து மகன் ஒருவன் இருப்பது தெரியவந்தது.

அவரின் தொல்லையால் நான் வீட்டை காலி செய்து விட்டு எனது போன் நம்பரை மாற்றிவிட்டேன். எப்படியோ எனது செல்போன் நம்பரை கண்டுபிடித்து என்னை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லாவிட்டால் என் குளியல் அறையில் வீடியோ எடுத்திருப்பதாகவும், அவன் கொடுத்த போனில் ஆபாச போட்டோக்கள் இருப்பதாகவும் அதை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி வருகிறார்.

மேலும், என்னை கொலை செய்து விடுவதாகவும், ஆசிட் வீசுவேன் என்றும், எனது பிள்ளைகளை கடத்துவேன் என்றும் கடந்த மூன்று மாதங்களாக வெவ்வேறு நம்பர்களில் இருந்து பலர் என்னை தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர். எனவே, மஞ்சுநாதனிடம் இருக்கும் என் சம்பந்தமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை கைப்பற்றி அழித்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவனிடம் இருந்து எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : actress ,nilani , Marriage, intimidation, porn movie, icon actress Nilani, police, complaint
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...