×

அயோத்தியில் 2005ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் விவகாரம்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பிரக்யராஜ் நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: அயோத்தியில் 2005ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பயங்கிரவாதிகள் தாக்குதல் நடத்திய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பிரக்யராஜ் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதல் வழக்கில் ஒருவரை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அயோத்தியில் கடந்த 2005ம் ஆண்டு 5-ம் தேதி பலத்த பாதுகாப்பு நிறைந்த ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும் பாதுகாப்பு வேலியை தாண்டி உள்ளே வந்த அவர்கள் துப்பாக்கியால் சுட்டபடியும், கையெறி குண்டுகள் வீசியும் முன்னேற முற்பட்ட நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது ஏற்பட்ட இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சண்டையில் தீவிரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டதுடன் பொதுமக்கள் இருவர் உயிரிழந்திருந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது பிரயாக்ராஜில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில் 63 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, 14 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்புகள் வழங்கப்பட்டன. அதில், கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒருவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags : Pragya Raj ,court ,terror attack ,Ayodhya , Ayodhya, terrorist attack, life imprisonment, Prakiraj court, verdict
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...