×

தமிழகம் முழுவதும் அரசு கலைக்கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று அரசு கலைக்கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதையடுத்து, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்கள் கல்லூரிகளுக்கு வந்தனர். தமிழகம் முழுவதும் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 1,143 கல்லூரிகள் இயங்கி வருகிறது. இவற்றில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள் கடந்த இரண்டு மாதங்களாக நடத்தப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டது. அவர்கள் கல்லூரிக்கு திரும்புவதற்கான சுற்றறிக்கையை கல்லூரி கல்வி இயக்ககம் அனுப்பியது. அதன்படி, நேற்று அரசு கலைக்கல்லூரிகளுக்கான இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படுகிறது. மாணவர்கள் நேற்று காலை முதல் கல்லூரிகளுக்கு வருகை தந்தனர். முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு பின்பு வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கல்லூரி கல்வி இயக்ககம் கல்லூரி நிர்வாகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘தனியார் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களுக்கு கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் கல்லூரிகளும், தனியார் கல்லூரிகளும் அந்தந்த கல்லூரி திறக்கும் தேதியை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகங்களே முடிவு செய்ய வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதன்படி அடுத்த திங்கட்கிழமைக்குள் மற்ற கல்லூரிகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Opening ,Government Art Galleries ,Tamil Nadu , Government Art Galleries , Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...