×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு நபர் ஆணைய 12ம் கட்ட விசாரணை இன்று துவக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பலி குறித்து விசாரிக்க  ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர்  விசாரணை ஆணையத்தை அரசு அமைத்தது. பலியானவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட 320க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை 11 கட்டங்களாக  ஒருநபர் ஆணையம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் ஆணையத்தின் 12ம் கட்ட விசாரணை இன்று துவங்குகிறது. இதற்காக சென்னை அலுவலகத்தில் இருந்து நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி வருகிறார். அவர் 21ம் தேதி வரை 60 பேரிடம் விசாரிக்க உள்ளதாக தெரிகிறது.

Tags : Tuticorin ,shootings , Tuticorin shootings , today
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்...