×

கருப்பூர் சுற்றுப்புறங்களில் பட்டுபோன தென்னையால் பரிதவிக்கும் விவசாயிகள்

சேலம் : சேலத்தை அடுத்த கருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்கள் அடியோடு பட்டுப்போனதால் வருமானம் இல்லாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம் கருப்பூர் அருகேயுள்ள ஈச்சக்காடு, கோட்டக்கவுண்டம்பட்டி, வெத்தலக்காரனூர், குள்ளக்கவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பரளவில் தென்னை, வாழை, கரும்பு, கடலை உள்ளிட்டவற்றை, விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியை போல மேற்கண்ட பகுதிகளிலும் மழை இல்லாததால் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாய நிலங்கள் மொட்டை காடாக காட்சியளிக்கிறது. வங்கிகளில் கடனை வாங்கி பயிர் செய்த விவசாயிகள் அடுத்த வேளை பிழப்பைக் கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஈச்சக்காடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: கருப்பூர் ஈச்சக்காடு பகுதியில் மட்டும் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பரளவுக்கும் அதிகமாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மரங்கள் அனைத்தும் இன்று, நேற்று நட்டவை அல்ல. சுமார் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பே, எங்கள் முன்னோர் நட்டது. இந்த மரங்களை எங்கள் முன்னோர்களாகத்தான் பார்த்தோம். ஆனால் இன்றைக்கு இவையெல்லாம் மொட்டையாக காட்சியளிக்கிறது.  கடந்த பல  ஆண்டாகவே போதிய மழையில்லை.

நன்கு விளைச்சலை ெகாடுத்த மரங்கள் கூட ஒரு குரும்பையைக் கூட கொடுக்கவில்லை. இந்த நிலை தென்னைக்கு மட்டுமல்ல, அனைத்து பயிர்களுக்கும் உள்ளது. விவசாயிகள் பலரும் நெல், கரும்பு நடவு செய்த இடத்தில் தற்போது புல், பூண்டு முளைத்து வருகிறது. இதனை பார்த்து பதறிப்போன விவசாயிகள் பலரும் ரியல் எஸ்டேட் காரர்களிடம் விற்றுவிட்டனர். இப்படியே ெசன்றால் விவசாயம் முற்றிலும் பொய்த்து விடும். எனவே தமிழக அரசு, விவசாயம் செழிக்கவும், விவசாயிகளை காக்கவும் விரைவாக ஏதேனும் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags : neighborhoods , karupur , salem,Coconut treet, dried, with out water
× RELATED ஆம்பூர் சுற்றுப்பகுதிகளில் அதிகம்...