×

பீகாரை மிரட்டும் மூளைக் காய்ச்சல் : உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு

முசாஃபர்பூர்: பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் மட்டும் என்செபாலிடிஸ் என்ற ஒருவித மூளைகாய்ச்சலால் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயானது மூளையின் செயல்பாட்டை தாக்கி குழப்பம், கோமா, வலிப்பு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும் ஒருவித காய்ச்சல் ஆகும். பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளை அதிகம் பாதித்துள்ளது. மேலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் என்செபாலிடிஸ் அறிகுறிகளுடன் 173 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு நிரம்பி வழிகிறது.

இதையடுத்து 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறைந்த ரத்த சர்க்கரை நிலையான ஹைட்போகிளிசீமியாவை தூண்டும் வகையில் குழந்தைகளை வெறும் வயிற்றோடு இரவில் தூங்க அனுமதிக்க வேண்டாம் என்றும், வெறும் வயிற்றில் லிச்சி உள்ளிட்டவற்றை சாப்பிட அனுமதிக்க வேண்டாம் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தி இருக்கிறார் .

இந்நிலையில் முசாபர்பூரில் கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 49 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 8 பேரும் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து, கிருஷ்ணா மருத்துவமனையில் பீகார் சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தற்போது மத்திய அரசு ஒரு மருத்துவக் குழுவை முசாஃபர் நகருக்கு அனுப்பி வைத்துள்ளது.

பீகாரில் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுவாக 4 ஒற்றுமைகள் உள்ளன.

1. குழந்தைகளின் குடும்பங்கள் வறுமையான நிலையில் உள்ளது.

2. குழந்தைகள் அனைவரும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள்.

3. அனைவருக்கும் ஒரே விதமான நோய் தாக்கியுள்ளது.

4.இறந்தவர்களில் 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளே அதிகம்.

முசாஃபர் பகுதியில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் நிலவி வருகிறது. ஏற்கெனவே ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் இந்த வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உயிரிழக்கும் நிலைக்குச் செல்கின்றனர். முசாஃபர் நகர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கோடைக்காலங்களில் இந்த நோய் அதிகம் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது.


Tags : deaths ,Bihar , Muzaffarpur, brain fever, encephalitis, attacking confusion, coma, epilepsy
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!