×

காவிரியில் தண்ணீர் திறக்கப்படாதது பற்றி ஆலோசிக்க ஜூன் 24-இல் மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

டெல்லி: காவிரியில் தண்ணீர் திறக்கப்படாதது பற்றி ஆலோசிக்க ஜூன் 24-இல் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. டெல்லியில் காவிரி ஆணை தலைவர் மசூத் உசேன் தலைமையில் ஆலோசனைக்
கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகளுக்கு காவிரி ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை மாதம் 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என தமிழக அரசு ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தும் என தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த மாதம் தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஜூன் தொடக்கத்தில் 4.5 டிஎம்சி நீர் வர வேண்டிய நிலையில் 1 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.


Tags : Cauvery Management Authority ,Cauvery ,unveiling , Cauvery Management Authority ,meets , June 24, discuss ,unopened water , Cauvery
× RELATED டெல்லியில் நடக்கும் காவிரி தொடர்பான...